

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பான திருத்தப்பட்ட கால அட்டவணையை பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது. கலந்தாய்வு மே 15 முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆசிரியர் பொது மாறுதல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி ஆகியோர் இணைந்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
‘ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த பொது மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களால்தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது திருத்தப்பட்ட கால அட்டவணைப்படி கலந்தாய்வு நடைபெறும்’ என்று அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளிக்கல்வி துறைக்கான கலந்தாய்வு மே 15 முதல் மே 26-ம் தேதி வரையும், தொடக்க கல்வி துறைக்கான கலந்தாய்வு மே 15 முதல் மே 24-ம் தேதி வரையும் நடை பெறுகிறது.