என்ஐஏ வழக்குகளில் வாதாடியதற்காக வக்கீல்கள் கைது: உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டனம்

என்ஐஏ வழக்குகளில் வாதாடியதற்காக வக்கீல்கள் கைது: உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டனம்
Updated on
1 min read

மதுரை: என்ஐஏ வழக்குகளில் வாதாடியதற்காக மதுரை, நெல்லை வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் சங்கத் (எம்பிஎச்ஏஏ) தலைவர் பி.ஆண்டிராஜ், செயலாளர் டி.அன்பரசு ஆகியோர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''எம்பிஎச்ஏஏ உறுப்பினர்களான வழக்கறிஞர்கள் எம்.முகமது அப்பாஸ், ஏ.முகமது யூசுப் ஆகியோர் தேசிய புலனாய்வு முகமை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகி வந்தனர். இந்த காரணத்துக்காக வழக்கறிஞர்கள் இருவரையும் என்ஐஏ கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இதே போல் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை உடைத்த ஏஎஸ்பி பல்வீர்சிங் செய்த கொடுஞ்செயல் வெளிவர காரணமாக இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி செய்து வந்த வழக்கறிஞர் வி.மகாராஜனையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.'' இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in