Published : 12 May 2023 06:10 AM
Last Updated : 12 May 2023 06:10 AM

டி-20 இந்திய கிரிக்கெட் மாற்றுத்திறனாளிகள் அணிக்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து இருவர் தேர்வு

சாகுல்ஹமீது, லட்சுமணகாந்தன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இருந்து டி-20 இந்திய கிரிக்கெட் மாற்றுத்திறனாளிகள் அணிக்கு இருவர் தேர்வாகியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் மங்கலம் அக்ஹாரபுதூரை சேர்ந்தவர் சாகுல்ஹமீது (23), காங்கயத்தை சேர்ந்தவர் லட்சுமணகாந்தன் (50). மாற்றுத்திறனாளிகளான இவர்கள், இந்திய கிரிக்கெட் மாற்றுத்திறனாளிகள் அணிக்கு தேர்வாகியுள்ளனர். சாகுல்ஹமீது இடது கை பேட்ஸ்மேன், பவுலர்.இவர், ஆல்ரவுண்டர் பிரிவிலும், லட்சுமிகாந்தன் வலது கை சுழற் பந்து வீச்சாளராகவும் தேர்வாகியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "சென்னை அளவில் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் போட்டிகளில் பங்கேற்றுள்ளோம். அடுத்த மாதம் சிங்கப்பூர், மலேசியா நாடுகளின் கிளப் அணிகளுக்கு எதிராக நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளோம்.

இந்த இரு நாடுகளுக்கு எதிராக நடைபெறும் டி-20 போட்டிகளில் பங்கேற்க உள்ளோம். ஒவ்வொருவரும் தனித்தனியாக பயிற்சி மேற்கொள்கிறோம். தேர்வுக்குழு எங்களை தேர்வு செய்துள்ளது.

எங்களுடன் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பி.கார்த்திக் (30), மதுரையை சேர்ந்த சச்சின்சிவா (37) ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். ஜூன் 11-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை மேற்குறிப்பிட்ட நாடுகளின் கிளப் அணிகளுக்கு எதிரான டி-20 போட்டிகளில் பங்கேற்கிறோம்” என்றனர்.

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் மேலாளர் பி.ஹரிசந்திரன் கூறும்போது, ‘‘திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் 4 பேரை தேர்வு செய்துள்ளோம். மதுரையை சேர்ந்த பேட்ஸ்மேன் சச்சின் சிவா கேப்டனாக செயல்படஉள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அப்பாஸ் அலி பயிற்சியாளராக உள்ளார்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x