

வரும் அக்டோபர் 20-ம் தேதி திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 20-10-2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கத்தில்"
நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்படுள்ளது.
தமிழகத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலுக்கு திமுக தொடர்ந்து தனது கண்டனத்தைத் தெரிவித்து வருகிறது. டெங்கு பாதித்த பகுதிகளில் திமுக தொண்டர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டந்தோறும் டெங்கு நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை திமுக தொண்டர்கள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என ஸ்டாலின் கூறிவரும்நிலையில், அக்.20 கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.