

சென்னை: .ஓ பன்னீர் செல்வமும் டிடிவி தினகரனும் துரோகிகள் என்று அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், ஓபிஎஸ்-டிடிவி தினகரன் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "மாயமானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளன. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான். இப்படித் தான் இருக்கும் அவர்களின் இணைப்பு.
இரண்டு துரோகிகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு அணியை உருவாக்குவதாகக் கூறி உள்ளார்கள். தினகரன் கூடாரம் காலியாகிக் கொண்டு உள்ளது. காலியாக உள்ள கூடாரத்தில் ஓட்டகம் புகுந்த நிலை தான் தற்போது உள்ளது. பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கட்சிக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு கிளைச்செயலாளர் பதவிக்குக் கூட தகுதி இல்லாதவர்" என்று தெரிவித்தார்.