

சென்னை: ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 6 மாவட்டங்களில் ரூ.30.72 கோடியில் கட்டப்பட்ட அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களைச் சந்திக்க வரும் பொதுமக்களின் வசதிக்காக, பழைய பழுதடைந்த கட்டிடங்களுக்குப் பதிலாக, புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டும் திட்டம்2008-ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசால்முதல்முறையாக அறிமுகப்படுத் தப்பட்டது.
அதன்படி தற்போது வரை 277புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலககட்டிடங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டு, 205 கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
7 ஊராட்சி ஒன்றியங்கள்: திருவாரூர் - குடவாசல், திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம், தருமபுரி - ஏரியூர், கடத்தூர், நீலகிரி - கோத்தகிரி,நாமக்கல் – வெண்ணந்தூர், கன்னியாகுமரி – முஞ்சிறை ஆகியஒன்றியங்களில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.22.87 கோடியில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும்,திருச்சியில், பல்வேறு அலுவலர்களுக்கான தனித்தனி அறைகளுடன் ரூ.7.85 கோடியில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலியில் திறந்துவைத்தார்.
200 வாகனங்கள்: மேலும், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்களுக்கு 2008-ம் ஆண்டு முதல்முதலாக அரசு சார்பில் வாகனங்கள் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் வழங்கப்பட்டது.
13 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் அரசு சார்பில் அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கடந்தாண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறி வித்தார்.
அதன்படி முதல்கட்டமாக, ரூ.25.40 கோடி மதிப்பில் 200 புதியஸ்கார்பியோ வாகனங்களை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் அடையாளமாக 12 வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ஊரக வளர்ச்சித் துறை செயலர் பெ.அமுதா, ஆணையர் (பயிற்சி) ஹர்சகாய் மீனா, ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது, சிறப்பு செயலர் எம்.கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.