மத்திய அரசு நிர்ணயித்துள்ள கரும்புக்கான ஆதார விலை நியாயமானதாக இல்லை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

மத்திய அரசு நிர்ணயித்துள்ள கரும்புக்கான ஆதார விலை நியாயமானதாக இல்லை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
Updated on
1 min read

சென்னை: கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஆதார விலை, நியாயமான சந்தை விலை கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விவசாய சங்கத்தலைவர் அய்யாகண்ணு சென்னைஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மற்றும் கடலூரில் செயல்படும் திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு, ரூ.157 கோடி கொள்முதல் நிலைவைத் தொகை உள்ளது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை ஆலை நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை. எனவே, உடனடியாக நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்குமாறு ஆலை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆலை நிர்வாகம் தரப்பில், தங்களால் முழு தொகையையும் தற்போது வழங்க இயலாது,57 சதவீத தொகையை வழங் கத் தயாராக இருப்பதாகவும், அதன்படிரூ.78 கோடியில், ரூ.45 கோடியை ஏற்கெனவே டெபாசிட் செய்து விட்டதாகவும், அதில் ரூ.37 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ஆலை நிர்வாகம் வழங்குவதாக ஒப்புக்கொண்ட ரூ.78 கோடியில் ஏற்கெனவேரூ.45 கோடி வழங்கப்பட்டுள்ள நிலுவையில், மீதமுள்ள ரூ. 33 கோடியை மூன்று மாதங்களில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள ஆதார விலை நியாயமானசந்தை விலை கிடையாது. விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ப கூடுதல்விலை கொடுத்தால் மட்டுமே,அவர்களின் வாழ்வாதாரம் செழிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in