Published : 11 May 2023 06:33 AM
Last Updated : 11 May 2023 06:33 AM
சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை (மே 12) காலை 6 மணி முதல்மறுநாள் (மே 13) காலை 6 மணி வரை மாநராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட எருக்கஞ்சேரி கழிவு நீர் நிலையம் செயல்படாது.
எனவே, மண்டலம் 4, 5, 6 மற்றும் 8-க்கு உட்பட்ட இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை எற்பட்டால், அவசரத் தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்றப்படும்.
இதற்காக, பொதுமக்கள் அந்தந்தப் பகுதி அலுவலர்கள் மற்றும் தலைமை அலுவலக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT