

தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தவர் கே.பி.முனுசாமி. சமீபத்தில் இவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
அமைச்சராக இருந்தபோது, சட்டசபையில் முதல் வரிசையில் மூன்றாவது இடத்தில் அவர் அமர்ந்திருந்தார். பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு அவருக்கு, ஆளுங்கட்சியினர் அமரும் பகுதியில் மூன்றாவது வரிசையில் கடைசி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த வரிசையில் அமர்ந்திருப்பவர்களில் பெரும்பாலோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.