Published : 24 Oct 2017 08:02 am

Updated : 24 Oct 2017 08:02 am

 

Published : 24 Oct 2017 08:02 AM
Last Updated : 24 Oct 2017 08:02 AM

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.1.5 கோடி மோசடி

1-5

வேளச்சேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தனர்.

“சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையின் சேமிப்பு திட்டத்தில் இணைந்து, தலா ரூ.60 ஆயிரத்துக்கும் மேல் கட்டியும், நகையோ, பணமோ கொடுக்கவில்லை. அவர்கள் தந்த காசோலையும் பவுன்ஸ் ஆகிவிட்டது. ரூ.1.5 கோடி வரை மோசடி நடந்துள்ளது. கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x