

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில் செல்போனை சார்ஜரில் போட்டபடி பேசிய டீ மாஸ்டர் மின்சாரம் பாய்ந்து இறந்தார். பழைய வண்ணாரப்பேட்டை, கெனால் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் (22). இவர் மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார்.
அங்குள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்து வீட்டுக்குச் சென்ற காமராஜ் செல்போனை சார்ஜரில் போட்டுவிட்டு போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி, வண்ணாரப்பேட்டை போலீஸார் சம்பவ இடம் விரைந்து காமராஜ் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.