

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சலிங் இன்று தொடங்குகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. கவுன்சலிங்கிற்கு வரும் மாணவர்களிடம் குறிப்பிட்ட தனியார் கல்லூரியில் சேரச் சொல்லி துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவது வழக்கம். இதுபோன்று செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
எச்சரிக்கை பலகைகள்
அதேபோல், தனியார் கல்லூரிகளில், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் எங்கு புகார் செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு பலகைகளும் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளன.
மேலும், கவுன்சலிங்கிற்கு வரும் மாணவ-மாணவிகள் கவுன்சலிங் நடைமுறைகளை எளிதில் தெரிந்துகொள்ள வசதியாக வழிகாட்டி அறிவிப்பு பலகைகளும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டு இருக்கின்றன.