கடலூர் சிறை கைதிகள் 8 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி

கடலூர் மத்திய சிறையில் பிளஸ் 2 அரசு தேர்வில் தேர்ச்சி பெற்ற தண்டனை கைதிகளுக்கு மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கடலூர் மத்திய சிறையில் பிளஸ் 2 அரசு தேர்வில் தேர்ச்சி பெற்ற தண்டனை கைதிகளுக்கு மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Updated on
1 min read

கடலூர்: கடலூர் மத்திய சிறை கேப்பர்குவாரி மலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

இவர்களில், நடந்து முடிந்த பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வை 8 தண்டனை கைதிகள் எழுதினர். நேற்று தேர்வு முடிவு வெளியானதில் 8 பேரும் தேர்ச்சி அடைந்தனர்.

தேர்வு எழுதிய தண்டனை கைதிகள் அருண்பாண்டியன் 464 மதிப்பெண்களும், ராஜகுரு 463 மதிப்பெண்களும், அன்பழகன் 452 மதிப்பெண்களும் பெற்றிருந்தனர்.

மேலும் தேவராஜ் 441, மோகன் 435, மணிகண்டன் 428, சசிக்குமார் 422, சையது 415 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கு கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in