Published : 30 Sep 2017 10:39 AM
Last Updated : 30 Sep 2017 10:39 AM

தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ஓராண்டுக்குப் பின்னர் முழுநேர ஆளுநர் நியமனம்

தமிழக புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இவர் மேகாலயா மாநில ஆளுநராக இருந்தவர்.

ரோசய்யா பதவிக்காலம் முடிந்தபின்னர் தமிழகத்துக்கு ஓராண்டுக்கு மேலாக பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் இருந்துவந்தார். மகாராஷ்டிர மாநில ஆளுநரான இவருக்கு தமிழக ஆளுநர் பதவி கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் அவரது மறைவு, அதிமுக பிளவு என அடுத்தடுத்து தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்திவந்தனர்.

இந்நிலையில், முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பார்வர்டு பிளாக், காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்தார். 1991-ல் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் இரு முறையும் பாஜக சார்பில் ஒரு முறையும் இவர் எம்.பி.யாக இருந்துள்ளார்.

ஐந்து மாநிலங்களுக்கு ஆளுநர் நியமனம்:

தமிழகத்துடன் அசாம், பிஹார், அந்தமான், அருணாச்சலப்பிரதேச மாநிலங்களுக்கும் ஆளுநரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

அசாம் மாநில ஆளுநராக ஜகதீஷ் முகி நியமிக்கப்பட்டுள்ளார். பிஹார் மாநில ஆளுநராக சத்யபால் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர, அருணாச்சலப் பிரதேச மாநில பிரிகேடியர் பி.டி. மிஸ்ராவும் மேகாலயா மாநில ஆளுநராக கங்கா பிரசாதும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x