தி.மலை | ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயற்சி: கூலிப்படையினர் தாக்கியதாக புகார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று தற்கொலைக்கு முயன்றவர்களிடம் இருந்து தீப்பெட்டியை பறிமுதல் செய்த காவல்துறையினர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று தற்கொலைக்கு முயன்றவர்களிடம் இருந்து தீப்பெட்டியை பறிமுதல் செய்த காவல்துறையினர்.
Updated on
1 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு விவசாய நில பிரச்சினை தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த நாளாள்பள்ளம் கிராமத்தில் வசிப்பவர் சுப்ரமணி(85). இவரது மனைவி பேபியம்மாள், மகன் பாலகிருஷ்ணன், மகள் சரஸ்வதி.

இவர்கள் 4 பேரும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ குளிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து தீப்பெட்டியை பறித்து அவர்களது செயலை தடுத்தனர்.

இதையடுத்து அவர்களிடம், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், “தங்களுக்கு சொந்தான நான்கரை ஏக்கர் விவசாய நிலத்தை அடமானம் வைத்து கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சம் கடன் பெற்ற தாகவும், தற்போது நிலத்தை விற்று விட்டதாகவும், நிலத்தில் இருந்து வெளியேற வேண்டும் என மிரட்டி கூலிப்படையினர் தாக்குதல் நடத்துவதாகவும், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும், தனது குடும் பத்துக்கு பாதுகாப்பு வழங்கி விவசாய நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்” என்றனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும், திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்துக்கு ஆட்டோவில் அழைத்து செல்லப் பட்டனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து எச்சரித்து அனுப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in