Published : 09 May 2023 06:04 AM
Last Updated : 09 May 2023 06:04 AM

புனல்காடு கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு: திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால், அடி அண்ணா மலை, ஆடையூர், தேவனந்தல் ஆகிய ஊராட்சிகளில் சேகரிக் கப்படும் குப்பை மற்றும் கழிவு களை, தேவனந்தல் ஊராட்சி புனல்காடு மலையடிவாரத்தில் தேர்வு செய்யப்பட்டிருந்த 5 ஏக்கர் நிலத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், குப்பை கிடங்கு அமைக்கும் பணியை, ஊராட்சி நிர்வாகம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மேற்கொண்டது. ‘பொக் லைன்’ இயந்திரம் மூலம் இடம் சீரமைக்கப்பட்டது. பின்னர், வேங்கிக்கால் ஊராட்சியில் இருந்து டிப்பர் லாரிகளில் கொண்டு வந்து, குப்பை கொட்டப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து, குப்பை கொண்டு வந்த லாரிகளை சிறைபிடித்து விரட்டினர். மேலும், ஆடையூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை மற்றும் குப்பை கிடங்கில் தென்னை மரக்கன்றுகளை நடுதல் என அடுத்தடுத்து போராட்டங்களை தீவிரப்படுத்தினர். இதனால், புனல்காடு கிடங்கில் குப்பை கொட்டுவது தடைபட்டது.

6 பேர் திடீர் கைது: குப்பை கிடங்கு அமைத்து முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறியது. இதன் எதிரொலியாக, அரசு இடத்தில் அத்துமீறி நுழைந்தது, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டியது உள்ளிட்ட பிரிவுகளில் திரு வண்ணாமலை கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று பிற்பகல் முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கினர். பின்னர், ஒப்பாரி வைத்து பெண்கள் கூச்சலிட்டனர்.

பின்னர், அவர்கள் கூறும்போது, ‘குப்பை கிடங்கு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும், பொய் வழக்கில் கைது செய்யப் பட்டவர்களை விடுவிக்க வேண்டும்’ என வலியுறுத்தினர்.

அவர்களிடம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் பேச்சு வார்த்தை நடத்தியும் பலனில்லை. கிராம மக்களின் போராட்டம் நேற்று மாலை 6 மணியை கடந்தும் தொடர்ந்தது.

மா. கம்யூனிஸ்ட் கண்டனம்: இதற்கிடையில், காவல் துறையின் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக் கையில், “திருவண்ணாலை அடுத்த புனல்காடு கிராமத்தில் திருவண்ணாமலையையொட்டி உள்ள பகுதிகளின் குப்பை கொட்டும், குப்பை கிடங்கு அமைக்க மாவட்ட நிர்வாகம் செயல் படுகிறது. இதை எதிர்த்து கிராம மக்கள், பெண்கள், விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் நேற்று ஈடுபட்டிருந்த பெண்களை காவல்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஆகியோர் முறைதவறிய வார்த்தைகளால் கேவலமாக திட்டி உள்ளனர். மேலும் அவர்கள் மீது குப்பையை கொட்டியுள்ளனர். மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, கிராம மக்களை மிரட்டும் தோரணையில் நடந்து கொண்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. அந்தந்த நகரம் மற்றும் கிராமங் களில் சேகரிக்கப்படும் குப்பை, அந்தந்த பகுதியிலேயே கொட்ட வேண்டும்.

கிராம மக்களையும், விவசாயி களையும் பாதுகாக்கும் விதமாக, குப்பை கொட்டும் பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் அணுக வேண் டும். குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களை கைது செய்துள்ள காவல் துறையினர், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பெண்களிடம் தவறான வார்த்தைகளை பேசி அத்துமீறி நடந்து கொண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x