Last Updated : 21 Sep, 2017 10:48 AM

 

Published : 21 Sep 2017 10:48 AM
Last Updated : 21 Sep 2017 10:48 AM

சென்னையில் கமல் - அரவிந்த் கேஜ்ரிவால் இன்று சந்திப்பு

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், நடிகர் கமல்ஹாசன் இன்று சந்திக்கவிருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் இறங்க பரிசீலித்துக் கொண்டிருக்கிறார். தனது அரசியல் கருத்துகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பகிரங்கமாகவும் பேசத் தொடங்கிவிட்டார். சொந்தமாக அரசியல் கட்சி தொடங்க யோசித்து வருவதாகவும் கடந்த வாரம் இணையதள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், அரவிந்த் கேஜ்ரிவால், கமல்ஹாசனை, சென்னையில் இன்று சந்திக்கவிருக்கிறார்.

கேஜ்ரிவால் எது குறித்து கமல்ஹாசனை சந்திக்கவுள்ளார் என்பது பற்றி கட்சித் தரப்பு கூற மறுத்துவிட்டது. அரசியல் ரீதியான சந்திப்பாக இது இருக்கும் என்று மட்டும் கூறப்படுகிறது.

கடந்த 2015ல், செப்டம்பர் மாதம், திரைத்துறைக்கு ஆதரவு வேண்டி கமல்ஹாசன், கேஜ்ரிவாலை, டெல்லி தலைமைசெயலகத்தில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x