Published : 03 Jul 2014 08:00 AM
Last Updated : 03 Jul 2014 08:00 AM

காஞ்சிபுரம் புறநகரில் அதிகரிக்கும் வழிப்பறி குற்றங்கள்- துணை கண்காணிப்பாளர் பணியிடம் நிரப்பப்படுமா?

மாவட்டத்தின் புறநகர் பகுதிகளாக உள்ள கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகள் நடுவே உள்ள சாலைகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம், வழிப் பறி செய்யும் சம்பவங்கள் அதி கரித்து வரும் நிலையில், இப்பகுதி களை கண்காணித்து போலீ ஸாரின் ரோந்து பணிகளை துரிதப் படுத்துவதற்காக, வண்டலூரை தலைமையிடமாக கொண்டு, விரை வில் துணை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட உள்ளதாக மாவட்ட எஸ்.பி., தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளாக மறைமலை நகர், கூடுவாஞ்சேரி சிங்கப்பெரு மாள் கோயில் ஆகிய பகுதிகள் விளங்கி வருகின்றன. இந்த பகுதி களில் வெளிநாட்டு கார் தொழிற் சாலைகள், ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளன. பல்வேறு மாவட் டங்களை சேர்ந்த இளைஞர்கள் இங்கு தங்கி வேலை செய்து வரு கின்றனர். மேலும், பல அடுக்கு மாடி குடியிருப்புகளும், அடுக்கு மாடி கட்டிடப் பணிகளும் நடந்து வருகின்றன. கட்டுமானப் பணிகளில் வடமாநிலத்தை சேர்ந்த வர்களே பெருமளவு ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி சம்பவங்களும் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்ப வங்களும் அதிகரித்து வருகின்றன.

மாவட்டத்தில் 2013-ம் ஆண்டு 77 வழிப்பறி சம்பவங்கள் தொடர் பாக வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. நடப்பு ஆண்டிலும் 37 வழிப்பறி வழக்குகள் பதிவாகி யுள்ளன. தொடர்ந்துவரும் இந்த வழிப்பறி சம்பவங்களால் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் சாலையில் நடமாடவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 35 சதவீத வழக்கு கள் கூடுவாஞ்சேரி மற்றும் மறை மலைநகர் காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே நடந்திருப்பது அதிர்ச்சி யளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர் மாரியப்பன் கூறுகையில், “கூடு வாஞ்சேரி மற்றும் வண்டலூர் ஆகிய பகுதிகளில் பகல் நேரத் தில் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம், இருசக்கர வாகனங் களில் தலைக் கவசம் அணிந்து வரும் மர்மநபர்கள், தாலி, செயின் மற்றும் நகைகளை திருடிச் செல்கின்றனர். வழிப் பறி குற்றங்களைத் தடுக்க போலீ ஸார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். ஆனால், இப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பணி யில் உள்ள போலீஸார், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் செங்கல்பட்டு துணை கண்காணிப் பாளர் ஆகியோரின் பார்வையில் இருந்து 60 கி.மீ.,தொலைவில் இருக்கின்றனர். ரோந்து பணிகளில் ஈடுபடாமல் தங்கள் இஷ்டம்போல் பணிசெய்து வருகின்றனர். அதனால், உயர் அதிகாரிகளின் நேரடி பார்வையில் இந்த காவல் நிலையங்களை கொண்டுவந்து கண்காணிப்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

இதுகுறித்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயக் குமார் கூறுகையில், “வழிப்பறி தொடர்பாக பதிவான வழக்கில் 90 சம்பவங்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குற்ற வாளிகள் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும், கூடுவாஞ் சேரி மற்றும் மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலை களில் சி.சி.டிவி., கேமரா பொருத்தி கண்காணிப்பதற்கான நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், தேசிய நெடுஞ் சாலைகளில் போக்குவரத்து போலீ ஸாரும் தொடர்ந்து வாகன கண் காணிப்பில் ஈடுபட்டு சந்தேகப்படும் நபர்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சில கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநிலத்தவர்கள் வழிப்பறியில் ஈடுபடுவது உண்மைதான். ஆனா லும், போலீஸார் விழிப்புடன் செயல் பட்டு வருவதால், குற்றவாளிகளை உடனடியாகப் பிடித்து வருகிறோம்.

கூடுவாஞ்சேரி மற்றும் மறை மலைநகர், ஓட்டேரி ஆகிய காவல் நிலையங்களை உள்ளடக்கி வண்டலூர் பகுதியில் துணை கண்காணிப்பாளர் பணியிடம் உரு வாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், துணை கண்காணிப் பாளர் அலுவலகம் அமைப்ப தற்காக வண்டலூர் பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள் ளோம். இன்னும் ஒருசில மாதங் களில் துணை கண்காணிப்பாளரை நியமித்து, பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகள் தீவிரமாக்கப்படும்.

பெண்கள் சாலையில் தனியாக நடந்து செல்லும்போது முன்னெச்சரிக்கையாக தங்க நகைகளை அணிவதைத் தவிர்க்க லாம். மேலும், ஆள்நடமாட்டம் குறைந்து காணப்படும் பகுதிக ளில் உள்ள சாலைகளில் செல்லும் போது, துணைக்கு நபர்களை அழைத்துச் செல்ல வேண்டும். வழிப்பறி சம்பவங்களைத் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பும் போலீஸாருக்கு அவசியம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x