

பழநி: ஸ்ரீமத் போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் பழநியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: பழநி முருகன் கோயில் மூலவர் சிலையை செய்த போகருக்கு, கோயிலில் விழா நடத்த கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக பழநி கோயில் நிர்வாகம் பாரம்பரிய நடைமுறைகளில் தலையிடுவது வேதனையளிக்கிறது. இதுகுறித்து கோட்டாட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம். திட்டமிட்டபடி மே 18-ல் போகர் ஜெயந்தி விழா நடக்கும் என்றார்.
பழநி கோயில் நடைமுறையிலும், பாரம்பரிய விழாக்களிலும் இல்லாத வகையில், போகர் ஜெயந்தி என்ற பெயரில் விழா நடத்த முயற்சி நடக்கிறது, அதை நடத்த கூடாது என கோயில் நிர்வாகம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.