ஆளுநர் என்ன ஆண்டவரா? - அமைச்சர் சேகர் பாபு கேள்வி 

பாலப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்
பாலப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்
Updated on
1 min read

சென்னை: ஆளுநர் என்ன ஆண்டவரா என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை, வில்லிவாக்கத்தில் மேம்பாலப் பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சேகர் பாபு, "ஆளுநர் குறிப்பிடுவது போல இரட்டை விரல் பரிசோதனை நடைபெற்றது என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீட்சிதர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஆளுநர் கூறுகிறாரா? தீட்சிதர்களுக்கு என தனி சட்டம் உள்ளதா ? புகார்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் என்ன ஆண்டவரா? இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆளும் ஆட்சி?. காலாவதியாக போவது ஆளுநர் பதவியும் அவர் முன் நிறுத்த நினைக்கும் இயக்கமும் தான்" என கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in