Published : 06 May 2023 07:12 AM
Last Updated : 06 May 2023 07:12 AM
சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை இன்டர்சிட்டி, மைசூரூ உள்ளிட்ட சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில் (வண்டி எண். 12679) வரும் 9, 10 மற்றும் 16-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரலுக்குப் பதிலாக, காட்பாடியில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கத்தில், இந்த ரயில் (12680) மேற்கண்ட தேதிகளில் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.
மைசூரு-சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (12610) வரும் 9, 10, 16-ம் தேதிகளில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆர் பெங்களூரு லால்பாக் விரைவு ரயில் (12607) மேற்கண்ட தேதிகளில் சென்னை சென்ட்ரலுக்குப் பதிலாக, காட்பாடியில் இருந்து இயக்கப்படும்.
மேலும், சென்னை சென்ட்ரல்-சாய்நகர் ஷீரடி அதிவிரைவு ரயில் (22601) வரும் 10, 17 மற்றும் ஜுன் 7-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10.20 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக, 2 மணி நேரம் தாமதமாக நண்பகல் 12.20 மணிக்குப் புறப்படும்.
காட்பாடி-ஜோர்லார்பேட்டை (06417/18) மெமூ விரைவு ரயில் வரும் 22, 31 மற்றும் ஜுன் 2, 5, 6, 7-ம் தேதிகளிலும், வேலூர்-அரக்கோணம் மெமூ விரைவு ரயில் (06735/36) வரும் 9, 10, 16-ம் தேதிகளில் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்குரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT