Published : 06 May 2023 04:07 AM
Last Updated : 06 May 2023 04:07 AM

மத ரீதியாக பேசி அரசியல் செய்யாமல் அரசுடன் இணக்கமாக போவதே ஆளுநர் கடமை: பொன்முடி

அமைச்சர் பொன்முடி | கோப்புப் படம்

சென்னை: மாநில அரசுடன் இணக்கமாக போவதுதான் ஆளுநரின் கடமை யாகும். அதை விடுத்து அரசியல் செய்யக் கூடாது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இது குறித்து உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை 53 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்த உயர்கல்வி நிறு வனங்களின் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழகத்தின் 18 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

அதேபோல், சென்னை பல்கலைக்கழகம் 10-ல் இருந்து 100-வது இடத்துக்கு சென்று விட்டதாக ஆளுநர் கூறியது தவறான தகவல். சென்னை பல்கலை. உலக அளவில் 547-வது இடத்திலும், தேசிய அளவில் 12-ம் இடத்திலும் உள்ளது. இதுதான் உண்மையான தகவல். அவருக்கு யார் தரவுகளை எடுத்து தந்தார்கள் என தெரியவில்லை.

இந்த திராவிட மாடல் ஆட்சி காலகட்டத்தில்தான் கல்வித்துறை சிறந்த வளர்ச்சி பெற்றுள்ளது. ஆளுநர் ஏராளமான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது கூட தமிழகத்தில் கல்வித் தரம் சிறப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார். இப்போது மாற்றி பேசுவது அரசியலுக்காக என எண்ண தோன்றுகிறது.

ஆளுநராக இருப்பவர் அரசியல் பேசுவது தவறு. ஆனால், மாணவர்களை அழைத்துவந்து மதரீதியாக பேசி அரசியலை செய்துவருகிறார். மாநில அரசுடன் இணக்கமாக செல்வதுதான் ஆளுநரின் கடமை. எனவே, ஆளுநர் அரசியலுக்கு அப்பாற்பட்டு, நிர்வாகத்தை நடத்துபவராக இருக்க வேண்டும். ஆனால், அவர் அரசியல் செய்து தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறார்.

திராவிட இயக்கம் வந்தபின் சனாதனம் தமிழகத்தில் காலாவதியாகி விட்டது. ஆளுநர் பதவிதான் தற்போது காலாவதியாக வேண்டிய ஒன்று. திராவிடம் தேசிய அளவில் பரவ தொடங்கியுள்ளது. மனித நேயம், சமூகநீதி, மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டதே திராவிடம். யாரையும் எதிர்த்து உருவாக் கப்பட்ட கொள்கையல்ல.

உலகில் உள்ள அனைத்து சமூக இயக்கங்களுக்கும் வழிகாட்டியாக திராவிட இயக்கம் திகழ்கிறது. திராவிட இயக்கம் பற்றி நான் எழுதிய புத்தகத்தை ஆளுநருக்கு அனுப்பலாம் என முடிவு செய்துள்ளேன்’’ என்றார். உலகில் உள்ள அனைத்து சமூக இயக்கங்களுக்கும் வழிகாட்டியாக திராவிட இயக்கம் திகழ்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x