சரத் பவார் | கோப்புப் படம்
சரத் பவார் | கோப்புப் படம்

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத் பவார் தொடர்ந்து வழிநடத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on

சென்னை: தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத் பவார் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை நோக்கி அகில இந்திய அரசியல் மையம் கொண்டிருக்கும் நேரத்தில், இந்திய அளவில் மதச்சார்பற்ற அணியை வலுப்படுத்துவதற்கு முக்கியமான, பெரும் தலைவர்களில் ஒருவரான மரியாதைக்குரிய சரத் பவார், தனது கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பதை மறுபரிசீலனை செய்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in