ஆளுநர், முதல்வர் குறித்து அவதூறு | 386 வீடியோக்களை நீக்க யூடியூப்-க்கு சைபர் க்ரைம் பிரிவு பரிந்துரை

யூடியூப்
யூடியூப்
Updated on
1 min read

சென்னை: ஆளுநர், முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை நீக்க யூடியூப்க்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக தமிழக காவல் துறையின் சைபர் க்ரைம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக சைபர் க்ரைம் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சமூக வலைதளங்களில், தமிழக ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டில், இதுவரை 40 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை தடை செய்ய யூடியூப்-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 221 சட்டவிரோத கடன் செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும் 61 கடன் செயலிகளை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in