அதிமுகவில் இணைவதற்கு தூது விட்டேனா?; பழனிசாமி கூறுவது உண்மையல்ல - ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு

அதிமுகவில் இணைவதற்கு தூது விட்டேனா?; பழனிசாமி கூறுவது உண்மையல்ல - ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு
Updated on
1 min read

மதுரை: அதிமுகவில் இணைவதற்கு நான்தூது அனுப்பியதாக பழனிசாமி கூறுவது பொய்யான தகவல் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையிலிருந்து நேற்று விமானம் மூலம் மதுரை வந்த அவர்,விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு நான் தூது அனுப்பியதாக பழனிசாமி கூறுவது பொய்யான தகவல். இது போன்று அவர் தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். அண்டப் புழுகு, ஆகாச புழுகு என்பதற்கான சான்றாக அவர் செயல்படுகிறார்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையமும், டெல்லி உயர் நீதிமன்றமும் பழனிசாமியிடம் அவரது தரப்பு பற்றி விளக்கம் அளிக்க கோரியதற்கு அவர் விளக்கம் அளிக்கட்டும் பார்க்கலாம்.

திருச்சி மாநாட்டுக்குப் பின் தொண்டர்கள் மனநிலையில் மாற்றம் உள்ளது. அவர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கின்றனர் என்பதற்கு திருச்சி மாநாடு சான்றாக நிரூபணமாகி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in