

சென்னை: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: செங்கை மாவட்டத்தில் சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.