Published : 05 May 2023 06:07 AM
Last Updated : 05 May 2023 06:07 AM
சென்னை: ஐஐடி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கிய நிலை குறித்த சுகாதார கணக்கெடுப்பு தொடங்கியது. இதற்காக 30 உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஐஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ஐஐடியில் பணியாற்றும் பேராசியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் ஆரோக்கிய நிலை குறித்துகணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழக அரசின் தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் இக்கணக்கெடுப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக நியமிக்கப்பட்டுள்ள 30-க்கும்மேற்பட்ட பிரத்யேக உளவியல் ஆலோசகர்கள், ஐஐடி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் ஆரோக்கிய நிலை குறித்த விவரங்களை சேகரிப்பர்.
‘குஷால் திட்டம்’ தொடக்கம்: இந்த கணக்கெடுப்பை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி நேற்று தொடங்கி வைத்தார். மேலும், ஐஐடி பேராசிரியர்கள் - மாணவர்கள் இடையே நெருக்கத்தை ஏற்படுத்த வகை செய்யும் ‘குஷால் திட்டம்’ என்ற புதிய திட்டத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT