Published : 05 May 2023 07:30 AM
Last Updated : 05 May 2023 07:30 AM
சென்னை: மாதவரம் - தரமணி வழித்தடத்தில் சுரங்க ரயில் நிலையங்களை அமைக்க 3 ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு விரைவில் ஒப்பந்தம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ், 118.9கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் மாதவரம்-சிறுசேரி சிப்காட்வரையிலான 3-வது வழித்தடத்தில், மாதவரம்-தரமணி வரை பாதையில் சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக தொய்வு ஏற்பட்டுள்ளது.
இப்பணிகளை மேற்கொள்வதற்காக, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தது. ஆனால், நிர்ணயிக்கப்பட்டதை காட்டிலும் அதிக விலை குறிப்பிடப்பட்டால், கடந்த 2021-ம் ஆண்டில் போடப்பட்ட6 ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து, புதிய ஒப்பந்தம்கோர முயற்சி எடுக்கப்பட்டது.
மேலும், ஒப்பந்தப்புள்ளி விவகாரத்தில் சில மாற்றங்கள் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. மேலும்,மாதவரம்-பெரம்பூர், அயனாவரம்-கெல்லீஸ், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி - ராயப்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை - அடையாறு,அடையாறு-தரமணி, கொளத்தூர் - நாதமுனி என 6 தொகுப்புகளை பிரித்து ஒப்பந்தம் வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில், மாதவரம்-தரமணி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, 3 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம்-பெரம்பூர் பாதையில் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானத்துக்காக, தினேஷ் சந்திரா அகர்வால் இன்ப்ராகான் பிரைவேட்நிறுவனம் மற்றும் சேமா எண்டர்பிரைசஸ் நிறுவனமும், அயனாவரம்-கெல்லீஸ் பாதையில் கட்டுமானப் பணிக்காக டாடா புராஜக்ட்ஸ் நிறுவனமும் குறைந்த ஏலத்தொகையை கோடிட்டு காட்டிஉள்ளன.
கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி-ராயப்பேட்டை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை-அடையாறு சந்திப்பு மற்றும் அடையாறு பணிமனை-தரமணி ஆகிய மீதமுள்ள பகுதிகளில் பணிகளை மேற்கொள்ள ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் கோரியுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு விரைவில் ஒப்பந்தம் வழங்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT