

சென்னை: தமிழகத்தில் 27 மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கிக்கடன் மூலமாக, 2 லட்சம் ஜெர்சி கலப்பின கறவை மாடுகளை வழங்க ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம், பால் உற்பத்தி மற்றும் கொள்முதலை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின் நிர்வாகம்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் பால் கொள்முதல் 37.38 லட்சமாக இருந்த நிலையில், தற்போது நாள்தோறும் 27 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது.
இந்நிலையில், ஆவின் பால்கொள்முதலை அதிகரிக்கும் வகையில், பால் உற்பத்தியாளர் களுக்கு ஜெர்சி கலப்பின கறவை மாடுகளை வங்கிக்கடன் மூலமாக வழங்க ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கூட்டுறவு பால் பண்ணைக்கு பால் விற்பனை செய்யும் உற் பத்தியாளர்களுக்கு வங்கி கடன்உதவியுடன் இந்த ஜெர்சி கலப்பினகறவை மாடுகள் வழங்கப்பட வுள்ளது. இதன்மூலம், அடுத்த சில ஆண்டுகளில் ஆவின் பால் தினசரி கொள்முதல் அளவு 5 லட்சம் முதல் 8 லட்சம் லிட்டர் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சொத்து பத்திரங்கள் இல்லாத விவசாயிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் உத்திர வாதத்தின் பேரில், ஜெர்சி கலப்பின கறவை மாடுகள் வாங்கஉதவி செய்யப்படும்.
இந்தக் கடன் தொகையில் ரூ.40 ஆயிரத்தை கூட்டுறவு சங்கமும், ரூ.10 ஆயிரத்தை பால் உற்பத்தியாளரும் திருப்பி செலுத்துவார்கள். இதன்பிறகு, பால் உற்பத்தியாளர்களுக்கான தினசரி பால் கட்டணத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை கழித்துக் கொள்ளப்படும்.
தற்போது, 27 மாவட்ட ஒன்றியங்களில் 2 லட்சம் உற்பத்தியாளர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது. இதற்காக, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து ஜெர்சி கலப்பின கறவை மாடுகள்வாங்கப்படவுள்ளன. இந்த திட்டத்தை அடுத்தமாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு ஆண் டில் 2 லட்சம் ஜெர்சி கலப்பின கறவை மாடுகள் வாங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.