

சென்னை: மே 7,8,9 ஆகிய நாட்களில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப் பில் கூறியிருப்பதாவது: நலன் பேணும் அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர், ஆசிரியர், மாணவர், மகளிர், விவசாயிகள், தொழிலாளிகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியார் நலன் பேணும் அரசாக திமுக அரசு திகழ்கிறது.
இந்த அரசின் சிறப்புகளையும், மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் சீர்மிகு திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகத்தில் உள்ள திமுக அமைப்பு ரீதியிலான 72 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய, பகுதி, நகர அமைப்புகள் சார்பில் மே 7, 8, 9 ஆகிய நாட்களில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடை பெறும். பொதுக்கூட்டங்கள் நடை பெறும் இடங்கள், அவற்றில் பங்கேற்கும் பேச்சாளர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.