Published : 30 Apr 2023 09:55 AM
Last Updated : 30 Apr 2023 09:55 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் நிலப்பரப்பில் 5-வது சிப்காட் அமைக்க விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு சிறு, குறு விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் விவசாயிகளிடம், வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்று 115-வது நாளாகக் காத்திருப்புப் போராட்டம் நடந்தது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT