Published : 30 Apr 2023 04:07 AM
Last Updated : 30 Apr 2023 04:07 AM

தமிழகத்துக்கு புதிதாக 2,000 பேருந்துகள் வாங்க திட்டம்

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் | கோப்புப் படம்

பெரம்பலூர்: தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக 2 ஆயிரம் பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் தெற்கு மாதவி கிராமத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 625 நபர்களும், அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தில் 125 நபர்களும், இதர போக்குவரத்துக் கழக கோட்டங்களுக்கு தேவைக் கேற்ப பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

15 ஆண்டுகள் நிறைவடைந்த பேருந்துகளை இயக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் படி, 15 ஆண்டுகள் நிறைவடைந்த பேருந்துகளை உடனடியாக கழிவு செய்தால் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து வசதி தடைபடும். எனவே, புதிதாக 2 ஆயிரம் பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பேருந்துகள் வாங்கி 6 மாத கால சோதனை ஓட்டம் நிறைவடைவதற்குள் 15 ஆண்டுகள் நிறைவடைந்த பேருந்துகள் படிப்படியாக கழிவு செய்யப்படும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x