Published : 30 Apr 2023 04:20 AM
Last Updated : 30 Apr 2023 04:20 AM

133-வது பிறந்த நாளையொட்டி பாவேந்தர் பாரதிதாசனுக்கு ஆளுநர், முதல்வர் புகழாரம்

தமிழ்நாடு அரசின் சார்பில், ‘பாவேந்தர் பாரதிதாசனின்' 133-வது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் 133-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பதிவில், “சிறந்த தமிழ் கவிஞர் மற்றும் எழுத்தாளரும் மகாகவி பாரதியாரை பின்பற்றியவருமான பாவேந்தர் பாரதிதாசனை, அவரது பிறந்த தினத்தன்று நினைவு கூர்வோம். அவரது முற்போக்கு இலக்கியப் படைப்புகள் எப்போதும் உத்வேகம் தரும்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “செந்தமிழை செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும். எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால், இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும். தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும் எனத் தமிழ் வளரவும் தமிழர் உயரவும் உணர்ச்சியூட்டி முற்போக்காய் பாப்புனைந்த புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் பிறந்தநாள்.

துறைதோறும் தமிழ் வளர்ச்சி, பெண் கல்விக்கான திட்டங்கள், பல மொழி பெயர்ப்புத் திட்டங்கள் என பாவேந்தர் காண விரும்பிய தமிழ்நாடாக இன்று எழுந்து நிற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்துக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,

சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகரராஜா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x