

திருச்சி: எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இம்மாத இறுதி வரை இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவையை மே மாதம் வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில்(எண்.06035) மே 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் எர்ணாக்குளம் ரயில் நிலையத்தில் இருந்து மதியம்1.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி ரயில் நிலையத்தை சென்றடையும்.
மறுவழித்தடத்தில், வேளாங்கண்ணி- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில்(எண்.06036) மே 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் முற்பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளம் ரயில்நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.