குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு 3-வது பிறந்த பெண் குழந்தைக்கு மாதம் ரூ.10,000 நிதி வழங்க ஐகோர்ட் உத்தரவு

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு 3-வது பிறந்த பெண் குழந்தைக்கு மாதம் ரூ.10,000 நிதி வழங்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: அரசு மருத்துவமனைவயில் குடும்பக் கட்டுப்பாடு செய்த தூத்துக்குடி பெண்ணுக்கு பிறந்த 3-வது குழந்தைக்கு தனியார் பள்ளியில் இலவச கல்வி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் வாசுகி. இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இருப்பினும், தனக்கு 3-வது குழந்தை பிறந்ததால் ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் பொருளாதார, சமுதாய பின்புலத்தைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். 3-வதாக பிறந்த குழந்தைக்கு அரசு அல்லது தனியார் பள்ளியில் இலவசமாக கல்வி வழங்க வேண்டும்.

3-வதாக பிறந்த குழந்தை 21 வயதை அடையும் வரை அரசுத் தரப்பில் மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் உணவு உள்ளிட்ட தேவைகளுக்கு நிதி வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in