Published : 26 Jul 2014 09:31 AM
Last Updated : 26 Jul 2014 09:31 AM

ஜி.ராமகிருஷ்ணனுக்கு எதிராக ஜெயலலிதா அவதூறு வழக்கு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்க சென்றபோது, தலை மைக் காவலர் கனகராஜ் என்பவர் டிராக்டர் ஏற்றி படு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை, கடந்த 22-ம் தேதி பத்திரிகைகளில் வெளியானது.

அந்த அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வித மாக அவதூறான கருத்து களை தெரிவித்துள்ளார் எனக் கூறி ராமகிருஷ்ணனுக்கு எதிராக வழக்கு தொடரப் பட்டுள்ளது.

இதற்கான மனுவை, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x