Published : 28 Apr 2023 06:22 AM
Last Updated : 28 Apr 2023 06:22 AM
சென்னை: பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ், எஸ்ஆர்எம்பிஆர் குளோபல் ரயில்வேஸ் நிறுவனத்தின் முதல் ரயில் சேவை நேற்று தொடங்கியது. சென்னை எழும்பூர்-ஷீரடி முதல்ரயில் சேவையை பாரிவேந்தர்எம்.பி. தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடிக்கு விருப்பமான திட்டங்களில் ஒன்றான பாரத் கவுரவ்திட்டத்தின் கீழ், எஸ்ஆர்எம்பிஆர் குளோபல் ரயில்வேஸ் நிறுவனம், நாடு முழுவதும் உள்ள ஆன்மிகத் தலங்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு 4 ரயில்களை இயக்குகிறது.
அந்த வகையில், எஸ்ஆர்எம்பிஆர் குளோபல் ரயில்வேஸ் நிறுவனத்தின் முதல் ரயில் சேவை நேற்று தொடங்கியது. சென்னை எழும்பூரில் இருந்து ஷீரடிக்கு ரயில்சேவை பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், எஸ்ஆர்எம் குழுமத்தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே வர்த்தக மேலாளர் ஹரி கிருஷ்ணன், சென்னை கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் சச்சின் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்
பின்னர், பாரிவேந்தர் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஆர்எம் குழுமம் பல்வேறு துறைகள் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெயரையும், புகழையும் பெற்றுள்ளது. கரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த எஸ்ஆர்எம் ஆம்னி பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன.
தற்போது, பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ், முதல் ரயில் சேவையைத் தொடங்கியுள்ளோம். எந்த ஆன்மிக, சுற்றுலா தலத்துக்கும் இந்த ரயிலில் பதிவு செய்து, பயணிக்கலாம். தமிழக மக்களுக்கு அனைத்துதெய்வ வழிபாட்டு தலங்களுக்கும் செல்லும் எளிதான வழியை, எஸ்ஆர்எம் குழுமம் அமைத்துத் தரும். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு, உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
இந்த ரயிலில் முதல் வகுப்பு ஏசி, 2 அடுக்கு ஏசி, 3 அடுக்கு ஏசிஆகியவற்றில் தலா 3 பெட்டிகள், ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதிபெட்டி உள்ளிட்ட 14 பெட்டிகள் உள்ளன. முதல் ரயில் பயணத்தில் 580 பயணிகள், 120 ஊழியர்கள்என 700 பேர் பங்கேற்றனர்.
இந்த ரயிலில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன், இலவச வைஃபை, சிசிடிவி கேமரா உள்ளிட்டவையும் உள்ளன. நட்சத்திர விடுதிகளில் தங்கும் வசதி, சுற்றிப் பார்க்க வாகனவசதியும் செய்யப்பட்டுள்ளன. இந்த ரயிலில் வழிகாட்டி, உதவியாளர், பாதுகாவலர் இருப்பார்கள்.
சென்னையில் இருந்து ஷீரடி,குலுமணாலி, டெல்லி, கமாக்யா, சண்டிகார், ஹைதராபாத், மைசூர்,அயோத்யா, வாரணாசி என பல்வேறு சுற்றுலா சேவைகள் எஸ்ஆர்எம்பிஆர் குளோபல் ரயில்வேஸ் சார்பில் வழங்கப்பட உள்ளன.
அதன்படி, நாகர்கோவில்-கோவா இடையே மே 15-ம்தேதியும், திருச்சி-கோவா இடையேமே 22-ம் தேதியும் தலா ஒரு ரயில் இயக்கப்பட உள்ளதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT