Published : 28 Apr 2023 06:12 AM
Last Updated : 28 Apr 2023 06:12 AM

மே தினத்தன்று மதுபானம் விற்க தடை

சென்னை: மே தினத்தை ஒட்டி வரும்மே 1-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மே தினமான மே 1-ம் தேதி தமிழக மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் விதிகளின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல்1) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சேர்ந்த பார்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சேர்ந்த பார்கள் மற்றும் எப்எல் 3(ஏ), எப்எல் 3(ஏஏ) மற்றும் எப்எல் 11 உரிமம் கொண்டபார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு, மே 1-ம் தேதிமதுபானம் விற்பனை செய்யக்கூடாது.

மீறினால் மதுபான விற்பனை விதிகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சென்னை மாவட்டஆட்சியர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x