

குரோம்பேட்டை: குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வருபவர் வீராசாமி. இவரது ஒரே மகனான திவாகர் (14) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஒரு வருடகாலமாக பிரீ பையர் என்று சொல்லக்கூடிய கேம் ஒன்றுக்கு அடிமையாகி சரிவரப் பள்ளிக்கு செல்லாமல், தந்தையின் மொபைல் மூலமாக இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.
இதுதொடர்பாக தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தன்மகனை காணவில்லை என்று குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வீராசாமி புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீஸார் தீவிரமாக திவாகரைத் தேடி வந்தனர். தாம்பரம் சானடோரியம் பச்சைமலையில் அவர் இருப்பது தெரியவந்தது.
அதன் பிறகு சிறுவனை மீட்டு காவல்நிலையம் அழைத்து சென்று அவரதுபெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். பெற்றோரின் அரவணைப்பின்றி பிரீ பையர் விளையாட்டுக்கு அவர் அடிமையாகி உள்ளது தெரியவந்தது,