மின் வாரிய அதிகாரிகள் மீதான லஞ்ச புகார்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

மின் வாரிய அதிகாரிகள் மீதான லஞ்ச புகார்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு
Updated on
1 min read

சென்னை: மின் வாரிய ஏடிஜிபி வேன்னியபெருமாள் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகள் மீதான லஞ்சப் புகார் குறித்த அறிக்கைகள், கடைசி நேரத்தில் தாக்கல் செய்யப்படுவதாக கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் ஓய்வுநடைமுறையில் லஞ்ச ஒழிப்புப் பிரிவின் ஒப்புதல் அளிப்பதில் சிக்கல்கள் எழுகின்றன. இதை சரி செய்ய வேண்டுமானால், விசாரணை அறிக்கைகளை முன்னதாகவே தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, நடப்பாண்டு ஓய்வுபெறும் முதல் நிலைப் பணியாளர்கள் மீதான லஞ்ச புகார் குறித்த விசாரணை அறிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு, சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் உள்ள கண்காணிப்பு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதேநேரம், நடப்பாண்டுஓய்வுபெறும் 2,3,4 நிலை பணியாளர்கள் மீதான லஞ்ச புகார்குறித்த விசாரணை அறிக்கையை தயார் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in