பழங்குடியின இருளர் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்: சிபிஐ விசாரணைக் கோரி தொடர மக்கள் உரிமைக் கூட்டமைப்பு முடிவு

பழங்குடியின இருளர் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் உண்மை அறியும் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது.
பழங்குடியின இருளர் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் உண்மை அறியும் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது.
Updated on
2 min read

புதுச்சேரி: பழங்குடியின இருளர் சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கோரி விரைவில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரஉள்ளதாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் சுகுமாரன் தெரிவித்தார்.

விழுப்புரம், புதுச்சேரியை சேர்ந்த பழங்குடி இருளர் சிறுவர்கள் உட்பட 7 பேர், காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் போலீ ஸாரால் 3 நாட்கள் சட்ட விரோதமாக காவலில் வைத்து கடும் சித்ரவதை செய்யப்பட்டு, திருட்டு வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மயிலம் காவல் நிலையத்திலும் வழக்கு போடப்பட்டது.

இது குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் கடந்த மாதம் 7-ம் தேதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பவானி மூத்த வழக்கறிஞர் மோகன், புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், காரைக்குடி மக்கள் சிவில் உரிமைக் கழகம் கோச்சடை, சென்னை அரசு கல் லூரி முன்னாள் பேராசிரியர் சிவக்குமார்,

திருமாவளவன், விழுப்புரம் மக்கள் பாதுகாப்புக் கழக தலைவர் ரமேஷ், புதுச்சேரி பழங்குடிமக்கள் விடுதலை இயக்க செயலாளர் ஏகாம்பரம் ஆகியோர் அடங்கிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இவர்கள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் நேற்று வெளியிட்டனர். அப்போது மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் கூறியதாவது.

காட்டேரிக்குப்பம் பெண் உதவி ஆய்வாளர் செங்கல்சூளையில் வேலை செய்த 2 சிறுவர்கள் உட்பட 7 பேரை பிடித்து சட்ட விரோமாக காவல்நிலையத்தில் வைத்து சித்ர வதை செய்துள்ளார். பழங்குடி இருளர்கள் மீது கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை போட்டுள்ளார். இவர்கள் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லை.காவல்நிலையத்தில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீஸார் மூன்றாம் தர சித்ரவதை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய தமிழக, புதுவை காவல் துறையினர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இருமாநில போலீஸார் தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதை வலியுறுத்தி விரைவில் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.

பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரண நிதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். உண்மை அறியும் குழு அறிக்கையை தமிழகம், புதுச்சேரி அரசுகளுக்கு அனுப்பிவிட்டு விரைவில் உயர்நீதிமன்றத்தை நாட உள்ளோம்" என்றார்.

இதுகுறித்து பேராசிரியர் பிரபா கல்வி மணி மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் கூறுகையில், "போலீஸ் காவலில் நடந்த கொலை பற்றி ‘ஜெய்பீம்' திரைப்படம் பேசியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான சட்டப்போராட்டத்தையும் எடுத்துக்கூறி யது. எனினும் அடித்தட்டு மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன.

‘ஜெய்பீம்' திரைப்படம் வெளியான பின்புதான் விழுப்பும் மாவட்டத்தில் குறிப்பாக இருளர்கள் மீது மீண்டும் கண்டுப்பிடிக்க முடியாத திடுட்டு வழக்குகள் அதிகம் போடப் படுகின்றன" என்று குறிப்பிட்டனர். இத்தகவலை உண்மை கண்டறியும் குழுவும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in