மூடப்பட வேண்டிய 500 டாஸ்மாக் கடைகள் கண்டறியும் பணி தொடங்கியது

மூடப்பட வேண்டிய 500 டாஸ்மாக் கடைகள் கண்டறியும் பணி தொடங்கியது
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில், டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடவேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டு வருகிறது.

படிப்படியாக குறைப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. அந்தவகையில், சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கையில் பேசிய அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, ‘‘தமிழகத்தில் 5329 மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் செயல்பட்டுவரும் நிலையில் அதில் தகுதியான 500 மதுபானக்கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும்’’ என்று அறிவித்தார். இந்நிலையில், 500 கடைகளை குறைப்பதற்கான நடவடிக்கையை டாஸ்மாக் நிறுவனம் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, 50 மீட்டர் இடைவெளியில் இருக்கும் கடைகள், வருவாய் குறைந்த கடைகள், பள்ளி, கோயில்கள் அருகில் மக்களால் அகற்றப்பட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடைகள் கண்டறியும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in