Published : 11 Jul 2014 11:04 AM
Last Updated : 11 Jul 2014 11:04 AM

புதிதாக 1 லட்சம் சிலிண்டர்: தட்டுப்பாடு விரைவில் குறையும்

காலாவதியான சிலிண்டர்கள் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விரைவில் ஒரு லட்சம் புதிய சிலிண்டர்கள் வருவதால் தட்டுப்பாடு குறையும் என்று இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான பெரும்பாலான சிலிண்டர்கள் காலாவதி ஆகிவிட்டன. இதையடுத்து, அவை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் வரத்து குறைந்ததால், மணலி யில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 4 காஸ் நிரப்பும் யூனிட்களில் ஒரு யூனிட் மட்டுமே செயல்பட்டு வந்தது. இதனால், அங்கு பணியாற்றும் 140 ஒப்பந்த ஊழியர்கள் எண்ணிக்கையை நிர்வாகம் குறைத்துள்ளது.

இதை கண்டித்து மணலி தொழிற்சாலை யில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. பின்னர் நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 2 யூனிட்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு நாள் ஒன்றுக்கு 45 தொழிலாளர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

‘‘ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தற்போது சமையல் காஸ் சிலிண்டர் நிரப்புவதில் இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது’’ என்று சிஐடியூ தமிழ்நாடு பெட்ரோலியம் மற்றும் காஸ் ஊழியர் சங்கத் தலைவர் விஜயன் கூறினார்.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, ‘‘புழக்கத்தில் இருந்த சிலிண்டர்கள் காலாவதி ஆன தால் பரிசோதனைக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளன. இதன் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டது. சமையல் காஸ் நிரப்ப புதிதாக ஒரு லட்சம் சிலிண்டர்கள் வரவுள்ளன. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்க ளுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் சிலிண் டர்கள் தேவைப்படுகின்றன. புதிய சிலிண்டர்கள் வருவதால் விரைவில் தட்டுப்பாடு குறையும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x