Published : 25 Apr 2023 07:01 AM
Last Updated : 25 Apr 2023 07:01 AM
சென்னை: செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ், அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதுகுறித்து, அஞ்சல்துறை அதிகாரிகள் கூறியதாவது: செல்வமகள் சேமிப்புத் திட்டம் 10 வயது பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் மாதம்தோறும் ரூ.100 என்ற குறைந்த தொகையைகூட சேமிக்க முடியும்.
இத்திட்டத்தின்கீழ், தமிழகத்தில் இதுவரை 38.38 லட்சம்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ், அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT