Published : 25 Apr 2023 06:27 AM
Last Updated : 25 Apr 2023 06:27 AM

இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது: சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை அமைச்சர் அழைப்பு

சென்னை: இலங்கை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாகவும், சுற்றுலாப் பயணிகள் கவலையின்றி வரலாம் எனவும் இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக ‘இலங்கைக்கு வாருங்கள்’ என்ற திட்டத்தை தென் இந்தியாவில் ஊக்கப்படுத்தும் வகையில், சென்னையில் நேற்று வர்த்தகர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், இலங்கையில் இருந்து வந்து பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட முகவர்கள், அங்குள்ள சுற்றுலாத் திட்டங்கள், சிறப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

இதில் இலங்கை சுற்றுலாத் துறைஅமைச்சர் ஹரின் பெர்னாண்டோபேசியதாவது: இந்தியா, மாலத்தீவு, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள்தான் அதிக அளவில் இலங்கைக்கு சுற்றுலா வருகின்றனர். இலங்கையில் மக்கள் சகஜநிலைக்குத் திரும்பியுள்ளனர். நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதில், சுற்றுலாத் துறையின் பங்கு மிகவும் முக்கியமானது.

இலங்கை மீதான எதிர்மறை விமர்சனங்களை அகற்றி, அழகானசுற்றுலா மையங்களை பயணிகள்கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியசுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் 20 டாலருக்கு விசாவழங்கப்படுகிறது. மேலும், மேமாதத்தில் இருந்து பயணிகளுக்கான சொகுசுக் கப்பலை, புதுச்சேரியில் இருந்து தலைமன்னாருக்கு மாதத்துக்கு 4 முறை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா, இலங்கை சுற்றுலாத் துறையின் ஊக்குவிப்பு பணியகத் தலைவர் சலகா கஜபாகு, இலங்கைமாநாட்டு பணியகத் தலைவர் திசும் ஜெயசூர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x