Published : 26 Sep 2017 08:40 PM
Last Updated : 26 Sep 2017 08:40 PM

கருணாநிதி நலமுடன் உள்ளார்: ஆற்காடு வீராசாமி

திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து கருணாநிதியை நலம் விசாரிப்பதற்காக மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, க.அன்பழகன், ஆ.ராசா உள்ளிட்டோர் கோபாலபுரம் இல்லம் சென்று சந்தித்தனர்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆற்காடு வீராசாமி, ''தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். வீண் வதந்திகளை பரப்பவோ, நம்பவோ வேண்டாம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x