Last Updated : 01 Sep, 2017 01:08 PM

 

Published : 01 Sep 2017 01:08 PM
Last Updated : 01 Sep 2017 01:08 PM

சேலம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 4 குழந்தைகள் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 4 குழந்தைகள் இறந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு மர்ம காய்ச்சல் உட்பட உடல் நலக் கோளாறால் நான்கு குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தனர்.

குழந்தைகளின் மரணத்துக்கான காரணம் குறித்து மருத்துவமனையின் டீன் கனகராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து மக்களிடையே டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அதிகாரிகளும், மருத்துவமனை அதிகாரிகளும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் உள்ளன.

சேலம் மாவட்டத்தில் இதுவரை டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 85 பேர் பாதிப்பட்டுள்ளனர். இவர்களில் மர்ம காய்ச்சலுக்கு 15 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில், கார்த்திக் (5), சஞ்சனா (ஐந்து மாதம்), தீபராஜ் (2), பவன்குமார் (2) ஆகிய குழந்தைகள் மர்ம காய்ச்சல் உட்பட பல்வேறு உடல் நலப் பாதிப்பு காரணமாக அடுத்தடுத்து இறந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x