Published : 23 Sep 2017 09:02 AM
Last Updated : 23 Sep 2017 09:02 AM

ஆவின் சார்பில் 7 வகையான இனிப்புகள் அறிமுகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் 7 வகையான சிறப்பு இனிப்புகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இனிப்பு வகைகளை அறிமுகப்படுத் தினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சாக்லேட் பர்பி, நட் அல்வா, முந்திரி அல்வா, பாதாம் அல்வா, முந்திரி கேக், முந்திரி பர்பி, பாதாம் பர்பி ஆகிய 7 ஆவின் இனிப்பு வகைகளும், சென்னையில் உள்ள 50 ஆவின் பாலகங்களில் வரும் 28-ம் தேதி முதல் கிடைக்கும். மேலும் மொத்தமாக ஆவின் இனிப்புகள் தேவைப்படுபவர் கள் ஆவின் வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நந்தனம் ஆவின் அலுவலகம் ஆகியவற்றில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறும்போது, “கமல்ஹாசன், சினிமாவில் மட்டுமே முதல்வராக முடியும். நிஜத்தில் முதலமைச்சராக முடியாது. முதலில், அவர் கவுன்சிலர் ஆகட்டும். அப்புறம் முதலமைச்சராக வரலாம். பாட்டெழுதி புகழ்பெற்ற புலவர்களும் இருக்கிறார்கள். அதேநேரம், குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கிய புலவர்களும் இருக்கிறார்கள். அப்படி குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்கும் புலவர் கமலஹாசன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x