தமிழை காக்கும் பணியில் தமிழறிஞர்கள் ஈடுபட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழை காக்கும் பணியில் தமிழறிஞர்கள் ஈடுபட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அன்னைத் தமிழைக் காப்பதற்காக ‘தமிழைத்தேடி...’ இயக்கத்தின் வாயிலாகமேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பயனளிக்கத் தொடங்கியுள்ளன. அடித்தட்டு மக்களிடம் கூட பிறமொழிக் கலப்பின்றி உரையாட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதே தமிழைத் தேடி இயக்கத்தின் வெற்றிதான்.

‘எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்’என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் தமிழைத்தேடி இயக்கத்தின் நோக்கம். இந்த நோக்கம் நிறைவேற உழைக்க வேண்டியது அனைவரின் கடமை. குறிப்பாக, தமிழறிஞர்கள், தமிழ்உணர்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஆசிரியர்கள் ஆகியோருக்கு இதில் பெரும் பங்கு இருக்க வேண்டும்.

முதற்கட்டமாக தமிழைத் தேடி இயக்கம் வடிவமைத்து வெளியிட்டுள்ள தனித்தமிழ் சொற்கள் அறிவோம், குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் ஆகியபதாகைகளை அதிக எண்ணிக்கையில் அமைக்க வேண்டும்.

ஊர்கூடித் தேர் இழுப்போம்: உங்கள் குடும்ப உறுப்பினர்களில் தொடங்கி, நீங்கள் பணிசெய்யும் இடம், நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தனித்தமிழிலேயே உரையாடுங்கள். ஊர்கூடித் தான்தேர் இழுக்க வேண்டும்.

எனவே, தமிழறிஞர்களே, தமிழ்உணர்வாளர்களே, தமிழ் ஆர்வலர்களே, தமிழ் ஆசிரியர்களே வாருங்கள்... ஒன்றாக கைகோர்ப்போம். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை விரைவில் உருவாக்குவோம். இவ்வாறு ராமதாஸ் தெரி வித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in