Published : 24 Apr 2023 06:27 AM
Last Updated : 24 Apr 2023 06:27 AM
தாம்பரம்: தாம்பரம் சானடோரியத்தில் உள்ளதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் சிறுதானியம் மற்றும் மருத்துவகுணமிக்க மூலிகை தாவரங்களின் கண்காட்சியை மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து துறை நீர்வழி மற்றும் ஆயுஷ் துறையின் அமைச்சர் சார்பானந்தா சோனாவால் நேற்று தொடங்கி வைத்தார்.
தாம்பரம் சானடோரியத்தில் 14.78 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தை 2005-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைத்தார். அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை என்ற பெயரில் இயங்கி வரும் இந்தமருத்துவமனை வளாகத்தில், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் அமைந்துள்ளது. மேலும்,200 படுக்கைகளுடன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இங்குசிகிச்சை பெறுகின்றனர். தினமும்2,500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும், இங்கு 8 சித்த மருத்துவத் துறைகளில் எம்.டி. சித்தா மேற்படிப்பும், 6 துறைகளில் பிஎச்.டி.சித்த மருத்துவ ஆராய்ச்சிப் படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இங்கு சிறுதானியம் மற்றும் மருத்துவ தாவரகண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து துறை நீர்வழி மற்றும் ஆயுஷ்துறையின் அமைச்சர் சார்பானந்தாசோனாவால் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் அவர் சித்தாஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், மருத்துவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்பு அதே வளாகத்தில் உள்ளஅயோத்திதாச பண்டிதர் மருத்துவமனைக்குச் சென்ற அமைச்சர் எந்தெந்த நோய்களுக்கு எவ்வகை மருந்துகள் எந்த அளவில் வழங்கப்படுகின்றன என்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் சித்த மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் குறித்தும் அதுபற்றி சிகிச்சை பெறவந்த நோயாளிகளிடமும் கேட்டறிந்தார்.
இதுதவிர சித்த மருத்துவ மாணவ, மாணவிகளிடம் சிறுதானியங்களின் நன்மைகள் பற்றிஎடுத்துரைத்தார். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மனிதஉடலின் உள் உறுப்புகள் அனைத்தும் சிறுதானிய வகைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்ததை ஆர்வத்துடன் பார்வையிட்டார்.
சித்த மருத்துவ முறையின் எதிர்காலம் மாணவர்கள் கையில் உள்ளது என அப்போதுஅமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். சிறுதானிய வகைகளில் செய்யப்பட்ட கைவினை பொருட்களை மத்திய அமைச்சருக்கு மாணவ, மாணவிகள் பரிசாக வழங்கினர்.
இக்கண்காட்சியில் சிறுதானிய வகைகள், மருத்துவ குணமிக்க தாவர வகைகள், பண்டைய காலமருத்துவ முறைகள், அதற்காகபயன்படுத்திய பொருட்கள், சித்த மருத்துவ அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் சிறுதானியங்களைக்கொண்டு செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவைகாட்சியில் வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் சித்த மருத்துவ நிறுவனம் இயக்குநர் ஆர்.மீனாகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT